மோடி அமைச்சரின் ராமரின் பிள்ளைகள் பேச்சு... மக்களிடையே கடும் அதிருப்தி!
பெங்களூர்: இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ராமரின் பிள்ளைகள் என்று மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளமத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசியுள்ள பேச்சு மக்களைக் கவரவில்லை. இது இந்துக்கள் அல்லாத பிற மத மக்களை புண்படுத்தும் என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சாத்வியின் இந்தப் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதேசமயம், ஆளுங்கட்சியினரும் கூட சாத்வியின் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை. சாத்வியைக் கண்டித்தும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாவானி என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை இதுதொடர்பாக நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் விவரம்.
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களிடம், அரசியல் தலைவர்களின் இதுபோன்ற பேச்சுக்கள் பிற மதத்தவரை புண்படுத்துமா, அவர்களுக்கு விரோதமாக போகுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என்று 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 37 சதவீதம் பேர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர் புண்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

டெல்லியில் சாத்வியின் பேச்சுக்கு 43 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 21 சதவீதம் பேர் சாத்வி பேச்சு சரி என்று கூறியுள்ளனர்.
மொத்தம் 720 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகளை இன்ஸ்டாவானி வெளியிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications