அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி... உளவுத் துறை எச்சரிக்கை!
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியை சேர்ந்த 18 எம்.பி.க்களுடன் நாளை அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்கு செல்கிறார்.

மேலும், ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாஸின் 81- வது பிறந்தநாள் விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. கோபால்தாஸின் பிறந்தநாளை அயோத்தியில் விமரிசையாக கொண்டாட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் இந்த தருணத்தை பயன்படுத்தி, பேருந்து, ரயில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் உமர் மத்னி என்பவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என்ற உளவுத் துறை எச்சரிக்கையடுத்து, அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளம் வழியாக உத்தரபிரதேசத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும், அம்பேத்கர் நகர், ஃபைஸாபாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனால், எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பும், சோதனை நடைமுறைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications