புதிய அரசு அமைந்ததும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும்: உளவுத்துறை உஷார் ரிப்போர்ட்

வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில்தான் சிமி, இந்தியன் முஜாகிதீன் போன்ற அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக இனம் காணப்பட்டு தடை செய்யப்பட்டன. மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான் பிரதமரானால் சட்டவிரோதமாக இந்தியாவில் வந்து குடியேறியுள்ள வங்கதேசத்து நாட்டவர்களை வெளியேற்றுவேன் என்று வெளிப்படையாகவே மோடி அறிவித்துள்ளார்.
பதவிக்கு வந்த உடனேயே தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மோடி உத்தரவிடக்கூடும் என்று ராணுவமும், உளவுத்துறை கருதுகின்றன.
நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பையடுத்து ஒசாமா பின்லேடனுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதலை தொடங்கியதைப்போல, மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று உளவுத்துறை கவனத்துக்கு வந்துள்ளது.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு தீவிரவாதிகள் இந்தியாவில் நாசவேலைகளை அதிகரிப்பார்கள் என்று உளவுத்துறை கருதுகிறது. இதற்கான பூர்வாங்க ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள உளவுத்துறை, தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பாக இருந்து ஜமாத்-உத்-தவா என பெயரை மாற்றிக்கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பின் மீது உளவுத்துறைக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது. இந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையீதுதான் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications