Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெருநாய்களுக்கு விஷம்.. பாலத்திற்கு பெயிண்ட்.. அறிவிக்கப்படாத 144.. டிரம்ப் பொண்ணுனா அவ்ளோ பயமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்தியா வந்தார் இவாங்கா டிரம்ப்... பிரதமரை இன்று சந்திக்கிறார்..வீடியோ

    ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். ஹைதராபாத்தில் நடக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார்.

    அவர் ஹைதராபாத் வருவதற்காக நிறைய வித்தியாசமான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஊரையே அரசாங்கம் மொத்தமாக புரட்டி போட்டுள்ளது.

    மேலும் அரசாங்கத்தின் கடுமையான சட்ட திட்டங்கள் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது. மேலும் சில சட்டங்கள் பெரும் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறது.

    பிச்சைக்காரர்களுக்கு நோ

    பிச்சைக்காரர்களுக்கு நோ

    இவாங்கா டிரம்ப் வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டது. முதலில் நேரடியாக காரணம் சொல்லாமல் சாலை விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கை இது என்று கூறினார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் காரணம் என்ன என்பது தெரிந்தது. இவாங்கா டிரம்ப் வருகைக்காக கூட்டம் கூட்டமாக பிச்சைக்காரர்கள் ஹைதராபாத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

    தெரு நாய்களுக்கு விஷம்

    தெரு நாய்களுக்கு விஷம்

    இவாங்கா டிரம்ப் வருகையில் பலரும் கவனிக்காமல் போன விஷயம் ஒன்று இருக்கிறது. அவர் வரும் போது தெருவில் எந்த நாயும் குறுக்கே சென்று விடக்கூடாது என்பதற்காக 100க்கும் அதிகமான தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றன. எல்லா நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்து இருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து பெரிதாக விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

    ஷங்கர் பட பாணி

    தற்போது இவாங்கா டிரம்ப் செல்ல இருக்கும் அனைத்து பாலத்திற்கு வித்தியாசமாக பெயிண்ட் அடித்து அழகுபடுத்தியுள்ளனர். அவருக்கு பிடிக்கும் வானவில் நிறத்தில் இதற்காக பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த தகவலும் அமெரிக்கா முழுக்க வைரல் ஆகியுள்ளது.

    ஊர் மொத்தம் மாறியது

    ஊர் மொத்தம் மாறியது

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் அனைத்து சாலைகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் புதிய சாலைகள் போடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக எல்லா சாலையிலும் இவாங்கா டிரம்ப் புகைப்படத்துடன் தன்னம்பிக்கை வாசகம் அடங்கிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சில இடங்களில் அவருக்கு ஆளுயர தனி கட்டவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.

    முடங்கிய நகரம்

    முடங்கிய நகரம்

    இந்த நிலையில் 10,000க்கும் அதிகமான போலீஸ்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அறிவிக்கப்படாத 144 சட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும் சில முக்கிய இணையதளங்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு படையும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

    சர்ச்சை

    தற்போது இவாங்கா டிரம்ப் உடுத்தியிருந்த ஆடை சர்ச்சை ஆகியுள்ளது. ஹைதராபாத்தில் இந்திய அதிகாரிகள் அவரை வரவேற்றபோது அவர் வெள்ளை நிறத்தில் கருப்பு கோடுகள் இருந்த ஆடை அணிந்து இருந்தார். ஆனால் அந்த ஆடைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது இல்லை. இதனால் ''அப்பாவும், மக்களும் எங்களை அமெரிக்க பொருட்களை உபயோகிக்க சொல்லிவிட்டு நீங்கள் வேறு நாட்டு பொருட்களை பயன்படுத்தி வருகிறீர்கள்'' என்று டிரம்ப் குறித்தும், இவாங்கா குறித்தும் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளனர்.

    பெரிய விருந்து

    பெரிய விருந்து

    இவாங்கா டிரம்ப் பிரதமர் மோடியுடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள 'தாஜ் பால்குமா பேலஸ்' ஹோட்டலில் உள்ள '101 டைனிங் ஹால்' என்ற இடத்தில் இந்த விருந்து நடக்க உள்ளது. ஒரே நேரத்தில் 101 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவு பெரிய 'டைனிங் டேபிள்' அங்கு இருக்கிறது. இதுதான் இந்தியாவில் பெரிய விருந்து அரங்காகும். இவர் வருகைக்காக வெளிநாட்டில் இருந்து தட்டுகளும், கிண்ணங்களும் புதிதாக வாங்கப்பட்டு உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+