டெல்லியில் ரூ30 கோடி போதைப் பொருள் பறிமுதல்! கூண்டோடு சிக்கிய சர்வதேச கடத்தல் கும்பல்!!
டெல்லி: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை கூண்டோடு டெல்லி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ30 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளூம் பறிமுதல் செய்யப்பட்டுளது.
டெல்லியில் அண்மையில் சிறப்பு போலீசாரால் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்ற 29 வயது இளைஞர், டெல்லியைச் சேர்ந்த 25 வயது ரக்மீத் சிங், 28 வயது சுர்பிர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாக டெல்லிக்கு போதைப் பொருள் கொண்டுவரப்படுவதாகவும் பின்னர் பிற இடங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் தெரியவந்தது.
மேலும் தென்னிந்தியாவுக்கும் இந்த போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கும் கடத்தப்பட்டிருப்பதும் இந்த விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்ய டெல்லி போலீசார் திட்டம் வகுத்தனர்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் மிஸ்டர் சிங் என்ற ஒருநபரிடமும் அருண் என்ற தமிழர் ஒருவரிடம் இருந்தும் 2 பெரிய பெட்டகங்களில் போதைப் பொருளை வேணுகோபால் ரெட்டி வாங்கியிருப்பதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மேலும் டெல்லி மகாபீர் நகரில் போதைப் பொருள் கடத்தலை ஒருங்கிணைக்கும் 2 ஆப்கான் நாட்டு சீக்கியர் பற்றிய விவரங்களையும் போலீசில் வேணுகோபால் ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச போதை கும்பலின் ஒரு பிரிவினர் இப்போது கூண்டோடு முழுவதுமாக போலீசில் பிடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications