இது தான் இந்தியாவின் ரியல் ஜனநாயகம்.. மேற்கு வங்கத்தில் சர்வதேசப் பிரதிநிதிகள் வியப்பு
கொல்கத்தா: இந்தியாவின் தேர்தல் முறையை "ஜனநாயகத்தின் திருவிழா" என்று உலக நாடுகளே போற்றி வருகின்றன. அந்த வகையில், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவை நேரடியாகப் பார்வையிடச் சென்ற சர்வதேசப் பிரதிநிதிகள், நமது தேர்தல் மேலாண்மையைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 'சர்வதேசத் தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின்'ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள சிலிகுரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்றனர். அங்கு அதிகாலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு மற்றும் அதனைத் தொடர்ந்து தொடங்கிய உண்மையான வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் அவர்கள் மிக அருகிலிருந்து கவனித்தனர்.

வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகளைக் கண்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக: வாக்குச்சாவடிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் 'வெப்காஸ்டிங்' வசதியை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகள் குடிநீர் வசதி, வெயிலைத் தவிர்க்க நிழற்குடை மற்றும் அமருவதற்கான இருக்கை வசதிகள் ஆகியவை அவர்களுக்குப் பெரும் வியப்பை அளித்தன. தேர்தல் என்பது வெறும் அதிகார மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு கொண்டாட்டம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த "திருவிழா போன்ற சூழலை" அவர்கள் கைதட்டிப் பாராட்டினர்.
International delegates as part of #IEVP2026 visited polling stations in Siliguri, Darjeeling district of West Bengal, to witness both the mock poll and the actual poll.
— Election Commission of India (@ECISVEEP) April 23, 2026
They appreciated the efficient management and festive environment of the polls. They also applauded the… pic.twitter.com/FoiyrmgoGm
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் இவ்வளவு நேர்த்தியாகவும், அமைதியாகவும், தொழில்நுட்ப வசதிகளுடனும் நடப்பது சர்வதேச நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வெளிநாட்டு பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.. என்ன தான் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் சண்டை போட்டாலும், மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், தேர்தலில் வாக்களிப்பதன் மூலமே உண்மையான ஜனநாயகத்தை மலர வைக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையமும் பல பிரச்சனைகள் மற்றும் சவால்களை கடந்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் முதற்கட்டத் தேர்தலில் மொத்தம் 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டார்ஜிலிங், சிலிகுரி, கூச் பெஹார் உள்ளிட்ட வடக்கு வங்காள மாவட்டங்கள் மற்றும் மால்டா, முர்ஷிதாபாத் ஆகிய பகுதிகள் இக்கட்டத்தில் தேர்தல் நடந்து வருகிறது.
மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தலைநகர் கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் போன்ற முக்கிய மாவட்டங்களில் 29ம் தேதி தான் நடைபெற போகிறது. அனைத்து கட்டத் தேர்தல்களும் முடிவடைந்த பிறகு, தமிழகத்துடன் சேர்த்து மே 4-ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications