இணையதள தாக்கத்தால் நாளிதழ் விற்பனையில் சரிவு: சுப்ரீம் கோர்ட் மாஜி தலைமை நீதிபதி பேச்சு
பெங்களூர்: இணையதளமும், சமூக வலைத்தளங்களும் அச்சு ஊடக துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன என்று இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா தெரிவித்தார்.

பெங்களூரின் எம்.பி.பிர்லா மேலாண்மை இன்ஸ்ட்டிடியூட்டின் 15வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெங்கடாச்சலய்யா "உலகம் எங்குமே இணையதளம் வந்த பிறகு அச்சு ஊடகங்கள் அதாவது, நாளிதழ்கள் விற்பனை சரிந்துள்ளது. இங்கிலாந்தின் முன்னணி நாளிதழ்களான டெய்லி மிரர், கார்டியன், சண்டே மெயில் மற்றும் டெலிகிராப் ஆகியவற்றின் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது.
இந்தியாவிலும் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களால் நாளிதழ்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணையதள செய்திகள் உதவிகரமாக உள்ளன. எனவே மறுநாள் காத்திருந்து செய்தித்தாளை பார்க்க யாருக்கும் பொறுமை கிடையாது. மேலும் நவீன உலகில் மக்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்துள்ளது. உறவினர்களிடம், பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லும் குணம் குறைந்துள்ளது. இதை மாணவர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications