4 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் இணையதள சேவை தொடங்கியது
4 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் இணையதள சேவை நேற்று இரவு முதல் தொடங்கியது
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு கருதி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இணையதள சேவை நேற்றிரவு முதல் மீண்டும் தொடங்கியது
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஹிஜ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, அனந்த்நாக் மாவட்டம் உள்ளிட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால், அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணையதள சேவை நேற்று இரவு முதல் விலக்கி கொள்ளப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநில முழுவதும் போஸ்ட் பெய்டு நெட்வொர்க் இணையதள சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications