தோனின்னு பேர் வச்சாலே இப்படித்தானா! குஜராத் மைதானத்தை குலுங்க வைத்த குட்டி பையன்.. யார் இந்த வீரர்?
அலகாபாத்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியில் ஆடும் இளம் வீரர் ஆயுஷ் பதோனி மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் ஷாக்கிங் முடிவுகள் வந்துள்ளன.
வலுவான சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய அணிகள் தோல்வி அடைந்துள்ளன. மாறாக பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா அணிகள் வெற்றியோடு தொடரை தொடங்கி உள்ளன.

என்ன ஆட்டம்
இந்த நிலையில் குஜராத், லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளும் இந்த சீசனில் முதல்முறை ஆடுகின்றன. இதில் லக்னோ அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

கலங்கி போன லக்னோ
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே வரிசையாக லக்னோ அணி விக்கெட்டுகளை இழந்தது. முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ராகுல் ஷமி பந்தில் டக் ஆனார். பின்னர் 3வது ஓவரில் மீண்டும் ஷமி பந்தில் 7 ரன்கள் எடுத்து டி காக் அவுட் ஆனார். பின்னர் 4வது ஓவரில் லீவிஸ் வெறும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் மீண்டும் ஷமி ஓவரில் மனிஷ் பாண்டே வெறும் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பதோனி
லக்னோ அணி திணறிக்கொண்டு இருந்த போதுதான் அந்த அணிக்காக தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் டீம் போட்டு ஆடினார்கள். இரண்டு பேரும் பார்ட்னர்ஷிப் அமைத்து வேகமாக ஆட தொடங்கினார்கள். ஒரு பக்கம் தீபக் ஹூடா 2 சிக்ஸ், 6 பவுண்டரி என்று அதிரடி காட்டினார். இதன் மூலம் 41 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஹூடா விளாசினார். எதிர் பக்கம் பதோனி நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார்.

பதோனி அதிரடி
தொடக்கத்தில் தோனி போல நிதானமான ஆடிய பதோனி அதன்பின் அடித்து வெளுக்க தொடங்கினார். அதிலும் ஹர்திக் பாண்டியா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், 2 பவுண்டரி என்று விளாசினார். யார்யா இவர் என்று மைதானமே வியந்து பார்க்கும் வகையில் இவரின் பேட்டிங் கூலாக இருந்தது. அதிலும் பாஸ்ட் பவுலர்களை இவர் அசாத்தியமாக எதிர்கொண்டார். லோகி பெர்குசன் வீசிய 18.5 பந்தை 146 கிமீ வேகத்தில் வந்ததை அப்படியே லாங் ஆன் திசையில் அப்படியே சிக்சாக மாற்றினார்.

ஆயுஷ் பதோனி யார்?
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியில் ஆடும் இளம் வீரர் ஆயுஷ் பதோனி மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். 2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் ஷாக்கிங் முடிவுகள் வந்துள்ளன.வலுவான சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய அணிகள் தோல்வி அடைந்துள்ளன. மாறாக பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா அணிகள் வெற்றியோடு தொடரை தொடங்கி உள்ளன.

அரை சதம்
இதன் மூலம் தனது முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தி உள்ளார். அவருக்கு தற்போது 22 வயதுதான் ஆகிறது. இவர் பவுலிங் ஆல் ரவுண்டர் என்றாலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இவர் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். ஆப் ஸ்பின் பவுலிங் சிறப்பாக செய்ய கூடியவர். லோவர் ஆர்டரில் பேட்டிங் செய்ய கூடியவர் இன்றைய போட்டியில் தன்னை சிறப்பான ஆல் ரவுண்டர் என்று நிரூபித்து உள்ளார்.

ஆயுஷ் பதோனி பின்னணி
இவரின் சொந்த ஊர் உத்தரகாண்ட் ஆகும். சையது முஷ்டாக் கோப்பாய் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடினார். 41 பந்துகள் பிடித்த அவர் இன்று 54 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம். கவுதம் கம்பீர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இவர் டெல்லி உள்ளூர் அணியில் இருந்து அப்படியே லக்னோ அணிக்கு வந்தார். முன்னதாக இலங்கைக்கு சமீபத்தில் நடந்த அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடினார்.

குஜராத் vs லக்னோ
இதில் முதல் இன்னிங்சில் 202 பந்தில் 185 ரன்கள் எடுத்தார். 7வது இடத்தில் பேட்டிங் இறங்கி அவர் இவ்வளவு ரன்களை அடித்தார். இதன் மூலம் இந்தியா அந்த போட்டியில் 589 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசம் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அண்டர் 19 இந்திய அணி வென்றது. அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் எடுத்து பதோனி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. டெஸ்டில் சிறப்பாக ஆடியவர் தற்போது டி 20 போட்டியிலும் கலக்கி உள்ளார். தோனி என்று பெயர் வைத்தாலே இப்படித்தான் போல என்று பலரும் இவரை பாராட்ட தொடங்கி உள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications