ஐபிஎல் பைனலில் பொளந்து கட்டிய சாய் சுதர்சன்.. 2.9 கோடி பார்வையாளர்கள்..ஜியோ சினிமா புதிய சாதனை
அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வீரர் சாய்சுதர்சன் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் பேட்டிங் செய்த போது ஜியோ சினிமாவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபீல்டிங்கில் டோட்டலாக சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயெ கேட்சை தீபக் சஹார் மிஸ் செய்தார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார். சகார் மட்டும் இல்லை..ஜடேஜா கூட ரன் அவுட் மிஸ் செய்தார்.
இதனால் தொடர்ந்து சென்னை அணி ஃபீல்டிங்கில் சொதப்ப இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய குஜராத் அடித்து ஆட ஆரம்பித்தது. அதேவேளையில், தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் -லின் அதிரடிக்கு தடை போட்டார். 7 வது ஓவரை ஜடேஜா வீசினார். இதில் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி கில்லை ஆட்டமிழக்க செய்தார்.
20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர். தீபக் சஹார் கேட் மிஸ் செய்ததால் அவரை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் கில் ஆட்டமிழந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஏனென்றல் சஹா ஒருபக்கம் அதிரடி காட்ட சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அவர் பேட்டிங்கில் அதிரடி காட்ட தொடங்கியதும் ஜியோ சினிமாவில் வியூவர்ஷிப் எண்ணிக்கையும் கிடு கிடுவென உயர்ந்தது. கிட்டதட்ட 3 கோடி பார்வையாளர்களை எட்டியது. சரியாக சொல்வது என்றால் 18-வது ஓவரில் மேட்சை ஜியோ சினிமா ஆப் வழியாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2.9 கோடியாக இருந்தது. இதன் மூலம் யாரும் தொடாத புதிய சாதனையை ஜியோ சினிமா வைத்து சாதனை படைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications