இறுதி ஆட்டத்தில் "டக் அவுட்" ஆகி அதிர்ச்சி அளித்த தோனி.. ஒரு நொடி உறைந்த மைதானம்!
அகமதாபாத்: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபீல்டிங்கில் டோட்டலாக சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயெ கேட்சை தீபக் சஹார் மிஸ் செய்தார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார். சகார் மட்டும் இல்லை..ஜடேஜா கூட ரன் அவுட் மிஸ் செய்தார். இதனால் தொடர்ந்து சென்னை அணி ஃபீல்டிங்கில் சொதப்ப இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய குஜராத் அடித்து ஆட ஆரம்பித்தது.
அதேவேளையில், தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் -லின் அதிரடிக்கு தடை போட்டார். 7 வது ஓவரை ஜடேஜா வீசினார். இதில் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி கில்லை ஆட்டமிழக்க செய்தார். 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர். தீபக் சஹார் கேட் மிஸ் செய்ததால் அவரை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் கில் ஆட்டமிழந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனாலும் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஏனென்றல் சஹா ஒருபக்கம் அதிரடி காட்ட சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 215 என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது.
ஆனால் வெறும் 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், சுமார் இரண்டு மணி நேரம் தாமதாக போட்டி மீண்டும் துவங்கியது. 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. வெற்றி இலக்கும் 171 ஆக குறைந்துள்ளது. அதுபோக பவர் பிளே 4 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஒரு பந்து வீச்சாளர் அதிபட்சமாக 3 ஓவர்கள் மட்டுமே என்றும் விதி மற்றியமைக்கப்பட்டது. சென்னை அணியில் ருதுரஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே பட்டாசு போல வெடித்தனர். அதிரடியாக இந்த ஜோடி விளையாடி சென்னை அணிக்கு நம்பிக்கை கொடுத்தது.
ஒருபக்கம் ரன்கள் வந்தாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் பரபப்புக்கு பஞ்சம் இன்றி மேட்ச் சென்று கொண்டிருந்தது. 12.4 ஓவர்களில் ராயுடு ஆட்ட மிழந்ததும் தோனி களம் இறங்கினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், தோனி போட்டியை முடித்துவைப்பார் என்று எதிபார்த்த நிலையில், டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரு நிமிடம் மைதானம் உறைந்து போனது.












Click it and Unblock the Notifications