ஐ.பி.எல். சூதாட்டம்... ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போலீசார்முடிவு
டெல்லி : ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்ளிட்ட 35 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கிரிக்கெட் உலகை புரட்டி எடுத்த ஐ.பி.எல். சூதாட்டம் 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் முதல்தர ஆட்டக் காரர்கள் அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள், சூதாட்டதரகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, ஆட்டத்தின் போது ‘ஸ்பாட்பிக்சிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்ளிட்டோர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைவாசம் அனுபவித்த இவர்கள் பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். ஸ்ரீசாந்த், சவானுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது.
கடந்த 2 ஆண்டுகளாக சூதாட்ட வழக்கில் அண்மையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தேடப்படும் குற்றவாளிகள் 6 பேரை தவிர்த்து, கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் உள்பட எஞ்சிய 36 பேர் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை கூடுதல் செசன்சு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அதிரடியாக தள்ளுபடி செய்தார். குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இந்த நிலையில், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் துறை சிறப்பு பிரிவு ஆணையர் எஸ்.என். ஸ்ரீவத்சவா, டெல்லி சட்டத்துறை, டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல் ஆணையரிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications