பாபர் மசூதியை இடித்ததற்காக அத்வானிக்கு பத்மவிபூஷண் விருதா?... லாலு கேள்வி!
பாட்னா: அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததற்காக அத்வானிக்கு பத்மவிபூஷண் விருது தரப்பட்டுள்ளதா.. அவருக்கு என்ன தகுதியின் கீழ் இந்த விருதை மத்திய அரசு கொடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அத்வானிக்கு என்ன தகுதியின் அடிப்படையில் பத்மவிபூஷண் விருது கொடுத்துள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது தலைமையில்தான் பாஜக ரத யாத்திரை நடத்தியது. பாபர் மசூதியை இடித்தார்கள். அதற்காக இந்த விருதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

பாஜகவை அமெரிக்க அதிபர் ஒபாமா மிகச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார். பாஜகவின் முகம் அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இதனால்தான் மத நல்லிணக்கம் குறித்து அவர் பேசியிருக்கிறார். மதத்தால் பிரச்சினை செய்யக் கூடாது என்பதை அவர் மறைமுகமாக தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். இது பாஜகவின் முகத்தில் விழுந்த அடியாகும்.
குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர் கலந்து கொண்டது தவறில்லை. ஆனால் அதை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது பாஜக. அணு சக்தி ஒப்பந்தமானது கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் பாஜக அல்ல என்றார் லாலு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications