வெள்ளம்தான்.. அதற்காக.. சிவசேனா எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்ககூடாதா? அசால்டாக கேட்பது அசாம் முதல்வர்
கவுஹாத்தி: அசாமில் வெள்ளம் வந்தால் யாரும் நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாதா என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 39 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.

அசாமில் அடைக்கலம்
இந்த நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸை சந்தித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிராவின் அண்டை மாநிலமான குஜராத்தில் எம்.எல்.ஏக்களை வைத்திருப்பது பாதுகாப்பில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின்பேரில், பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு எம்.எல்.ஏக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

அசாம் காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த நிலையில், அசாம் மாநிலத்தைவிட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் வெளியேற வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் புபேன் குமார் போரா தெரிவித்து இருக்கிறார். வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அசாம் அரசும் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் மக்களை கண்டுகொள்ளாமல் சிவசேனா எம்.எல்.ஏக்களை உபசரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அசாம் முதலமைச்சர்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "வெள்ளத்துக்கும், சிவசேனா எம்.எல்.ஏக்களில் அசாம் வந்திருப்பதற்கும் என்ன தொடர்பு என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவர் அசாம் வருவதையும் ஹோட்டலில் தங்குவதையும் வெள்ளம் தீர்மானிக்காது. உணவகங்களில் யாரும் தங்கி இருக்கக்கூடாது என்று சொல்ல இது ஒன்றும் பெருந்தொற்று காலமில்லை. கவுஹாத்தில் 200க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. அசாமில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் அனைவரையும் ஹோட்டல்களை விட்டு காலி செய்ய சொல்லலாமா? இது என்ன மாதிரியான வாதம்?

எம்.எல்.ஏக்கள் வந்தது நல்லது
அசாமில் ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பதற்கான செலவுகளை அசாம் அரசு ஏற்றுள்ளதாக பரவும் தகவலை மறுத்த அவர், அவர்களை பாதுகாப்பாகவும், இடையூறுகள் இன்றியும் கவனித்துக்கொள்வதே எங்கள் பணி. மகாராஷ்டிரா பாஜகவில் என்ன நடந்தால் எனக்கென்ன. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் நாங்கள் வரவேற்கிறோம். சொல்லப்போனால் அசாமுக்கு சிவசேனா எம்.எல்.ஏக்கள் வந்ததால்தான் வெள்ளம் பற்றி இந்தியாவே பேசுகிறது. இதேபோல் அசாமில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் எம்.எல்.ஏக்கள் வந்து பார்வையிட வேண்டும்." என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications