ஜார்க்கண்ட் பெண் ஆளுநரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த மோடி திட்டம்?
டெல்லி: ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி மர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
59 வயதாகும் மர்முவை மோடி வேட்பாளராக்க சில காரணங்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது பாஜகவிடம் உள்ள வாக்குப் பற்றாக்குறையை சரி கட்டுவதே இந்தத் தேர்வின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.

மர்முவை வேட்பாளராக்குவதன் மூலம் ஒடிஷா மாநிலத்தில் உள்ள வாக்குகளை மொத்தமாக அள்ளி விடலாம் என்பதே மோடியின் கணக்கு என்கிறார்கள். இதனால் பாஜக வேட்பாளர் நிற்கவும் வாய்ப்புள்ளது, பழங்குடியினர் சமூகத்தின் அன்பையும் பெற முடியும் என்பது போனஸ் கணக்கு என்கிறார்கள்.
தற்போது திரவுபதி மர்முவின் பெயர் தீவிரப் பரிசீலனையில் உள்ளதாக பாஜக தரப்பிலிருந்து ஒன்இந்தியாவுக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரவுபதி தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கிறார். 20 வருட காலம் அரசியலில் இருந்தவர் இவர் 1997ம் ஆணடு இவர் முதலில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஒடிஷா சட்டசபைக்குத் தேர்வானார். சிறந்த எம்.எல்.ஏ என்ற பெயரை வாங்கியவர் மர்மு.
சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். பழங்குடியினர் முன்னேற்றத்துக்காக தீவிரமாக பாடுபட்டவர். எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காதவரும் கூட. இதனால்தான் இவரை பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் தேவை. தற்போது பாஜகவிடம் மொத்தமாக 5,31,954 லட்சம் வாக்குகள் உள்ளன (கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து). ஒடிஷாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதாதளத்திடம் 17,433 எம்.எல்.ஏ வாக்குகளும், 19,824 எம்.பி வாக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications