போங்கடா நீங்களும், உங்க கல்யாணமும்... கடுப்பான மணமகன்: "கலகல" வீடியோ!
டெல்லி: இருப்பதிலேயே போரான திருமணம் என்ற பெயரில் கலாட்டா வீடியோ ஒன்று இணையதளத்தில் பிரபலமாகியுள்ளது.
திருமண வீட்டில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்களின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி போஸ் கொடுங்கள், அப்படி போஸ் கொடுங்கள் என்று அவர்கள் மணமக்களை படாதபாடு படுத்திவிடுகிறார்கள். இதனால் புகைப்படக்காரர்களை கண்டாலே மணமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இணையதளத்தில் ஒரு கல்யாண வீடியோ பிரபலமாகியுள்ளது. அந்த வீடியோ விவரம் வருமாறு,

மாலை
புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்கள் சுற்றி நிற்க மாப்பிள்ளை எந்தவித மகிழ்ச்சியும் இன்றி மணமகளின் கழுத்தில் மாலை போடுகிறார். மாலை அணிவித்த பிறகும் அவர் முகத்தில் பெயருக்கு கூட சிரிப்பை பார்க்க முடியவில்லை. புகைப்படக்காரர்களின் சேட்டையால் கடுப்பாகிவிட்டார் போன்று.

மணமகள்
அத்தனை கூட்டத்திற்கு முன்பு வெட்கத்தோடு மணமகள் மாப்பிள்ளை கழுத்தில் மாலையை போட அது தலைப்பாகையில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்த புகைப்படக்காரர் மாலையை எடுத்து மணமகள் கையில் கொடுத்து மீண்டும் அணிவிக்குமாறு கூறினார்.

மறுபடியும்
மணமகள் மீண்டும் மணமகனுக்கு மாலை அணிவிக்க அது அவரது தலைப்பாகையில் சிக்கிக் கொண்டது. இப்படியே விட்டால் புகைப்படக்காரர்கள் மீண்டும் மணமகளை மாலையிட செய்வார்கள் என்று ஆத்திரம் அடைந்த மணமகன் மாலையை அறுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

என்ன கொடுமை சார்!
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அடப்பாவமே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்களின் சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா? அநியாயமாக ஒரு கல்யாணத்தில் குழப்பம் செய்துவிட்டார்களே என்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications