மேகி என்ன அந்த அளவுக்கு மோசமான உணவா??

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சீன உணவுப் புரியர்களுக்கு இப்போது கடுமையான நேரம். காரணம், அவர்களது விருப்பத்துக்குரிய 2 நிமிடத்தில் தயாரிக்கக் கூடிய மேகி நூடுல்ஸ் தடையை சந்தித்துள்ளது. இந்த மேகியானது உணவுப் பிரியர்களிடம் மட்டுமல்லாமல், வேலை பார்ப்போருக்கு மத்தியிலும் மிகவும் பிரபலமானதாகும்.

இந்தியாவில் மேகி 1980களில் நெஸ்லேவால் அறி்முகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் குறுகிய காலத்தில் இந்திய சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டது. தடை செய்ய்படும் வரை மேகிதான் நம்பர் ஒன் நூடுல்ஸாக இருந்து வந்தது.

Is the tasty and yummy instant noodle Maggi really unsafe?

இதுதவிர மேகி மசாலா, சூப் மிக்ஸஸ் உள்ளிட்டவையும் பிரபலமானவையே.

இப்போது என்ன வந்தது மேகிக்கு?

ஆனால் திடீரென தற்போது மேகிக்கு சிக்கல் வந்துள்ளது. சமீபத்தில் உ.பியைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் மேகி சாம்பிள்கள் மீது சோதனை நடத்தியபோது அதில் உணவில் சேர்க்கப்படும் எம்எஸ்ஜி மற்றும் காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் நெஸ்லேவோ மேகியில் எம்எஸ்ஜியே இல்லை என்று கூறுகிறது.

உ.பியில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் நாடு தழுவிய சோதனைகள் நடைபெற்று பலரும் தடை விதித்துள்ளனர்.

எம்.எஸ்.ஜி என்றால் என்ன?

மோனோ சோடியம் குளுட்டமேட் என்பதன் சுருக்கம்தான் எம்.எஸ்.சி காய்கறிகள், மஷ்ரூம், சீஸ் மற்றும் பிற உணவுகளில் உருவாகும் அமீனா ஆசிட் ஆகும் இது.

சுவை கொடுப்பதற்காகவும், உணவின் ருசியைக் கூட்டுவதற்காகவும் இதை சேர்க்கிறார்கள். சீன உணவுப் பொருட்களில் எம்எஸ்ஜி வழக்கமாக சேர்க்கப்படும். மேலும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உணவுகளில் இது சேர்க்கப்படுவது வழக்கம்.

எம்எஸ்ஜி உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கானதல்ல என்று அமெரிக்க மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இருப்பினும் அதன் அளவுதான் இதுவரை பிரச்சினையாக உளளது.

என்ன பாதிப்பு வரும்

எம்எஸ்ஜி அதிகம் இருந்தால் கைகள் பலவீனமாகும், அலர்ஜி ஏற்படும், ஹைப்பர் சென்சிட்டிவிட்டி ஏற்படும், வயிறு வலி வரும், தலைவலி வரும், உடல் நடுக்கம், வயிற்றில் எரிச்சல், கை, கால் முகத்தில் வலி மரத்துப் போகும் உணர்வு வரும் என்று கூறுவார்கள்.

ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு எம்எஸ்ஜி தான் காரணம் என்று மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்படவில்லை. சில நுகர்வோர்களுக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.

இந்த சமயத்தில் நாம் எம்எஸ்ஜி யின் முக்கியத்துவம் குறித்து அறிய வேண்டியது அவசியம். சாப்பாட்டில் குறைந்த அளவு சோடியம் உப்பை எடுத்துக் கொள்வோருக்கு தேவையான உப்புச் சக்தியைக் கொடுக்க எம்எஸ்ஜி அவசியமாகும். சாதாரண உப்பை எடுத்துக் கொள்வதற்குப் பதில் எம்எஸ்ஜியை எடுத்துக் கொண்டால், 40 சதவீத சோடியம் குறையும், அதேசமயம், தேவையான ருசியும் கிடைத்து விடும்.

உண்மையில் இது அத்தியாவசியமில்லாத அமீனா ஆசிட் ஆகும். நமது உடல் செல்களிலேயே இது உற்பத்தியாகிறது. அதேபோல குளுட்டமேட் என்பது காய்கறிகள், பால் பொருட்கள், காளான் போன்றவற்றில் இயற்கையாகவே உற்பத்தியாகிறது. நமது உடலில் சேரும் குளுட்டமேட் சக்தியாக மாறி நமக்கு பலம் தரவே உதவுகிறது.

நமது உடலிலேயே எம்எஸ்ஜி இருக்கும்போது, ஏன் வெளியிலிருந்து அதை சேர்க்கக் கூடாது என்பதற்கு எதிர்ப்பாளர்களால் விளக்கம் தர முடியவில்லை.

அதேசமயம் காரீயம், உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகும். அதனால் உடல் அளவில் பாதிப்புகள் வரலாம். இருப்பினும் மேகியில் காரீயம் அதிக அளவில் இல்லை என்கிறது நெஸ்லே. மேலும் கெட்டுப் போனா காரீயம் அதில் சேர்க்கப்படுவதே இல்லை என்றும் நெஸ்லே கூறுகிறது.

இருப்பினும் மேகியில் கெட்டுப் போன காரீயம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது உண்மையிலேயே கவலை தரும் விஷயம்தான். அதுகுறித்து ஆராயப்பட வேண்டும்.

ஒரு நூடுல்ஸை தடை செய்து விட்டார்கள். அப்படியானால் மற்ற நூடுல்ஸ்கள் பாதுகாப்பானவையா?

உண்மையிலேயே நூடுல்ஸின் ஊட்டச் சத்துதான் என்ன?

எம்.எஸ்.ஜி வேண்டாம், சரி. ஆனால் உணவில் சேர்க்கப்படும் பிற அடிக்டிவ்கள் பாதுகாப்பானவையா.. அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லையே ஏன்?

எனவே வெளி வரும் தகவல்களை கண்ணை மூடிக் கொண்டு ஏற்பதை விட உண்மையை ஆராய்ந்து முடிவுக்கு வருவதே நல்லது.

http://www.schoolpage.me/is-the-tasty-and-yummy-instant-noodle-maggi-really-unsafe/#more-2153

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+