இந்தியாவில் வெளிநாட்டு டூரிஸ்டுகளை கத்தியால் குத்தி கொல்ல ஐஎஸ்ஐஎஸ் சதி.. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி சரமாரியாக படுகொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மத்திய அரசுக்கு உளவுத்துறை வழங்கியுள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் தீவிரவாத இயக்கங்கள், சதி வேலையில் ஈடுபட முடியவில்லை.
பாதுகாப்பு படையினர், போலீசாரின் சோதனையில் சிக்காமல் ஆயுதங்களை கடத்தி செல்வது தீவிரவாதிகளால் முடியாத காரியமாகியுள்ளது. எனவே மாற்று வழிகளில் தாக்குதலை தொடுக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கத்தியை வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்வது அவர்கள் நோக்கம். இவர்கள் இலக்கு, வெளிநாட்டு பயணிகள்.
குறிப்பாக காஷ்மீரின் தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவர்களின் முதல் இலக்காக இருக்க கூடும். நீஸ் நகரில், லாரியை விட்டு கூட்டத்தில் மோதச் செய்து பலரை கொன்றனர் தீவிரவாதிகள். அதுவரையில் அப்படி ஒரு தாக்குதலை கேள்விப்பட்டிருக்கவில்லை. அதேபோன்ற மாற்று திட்டத்தோடு இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
காஷ்மீர் மட்டுமின்றி, பெங்களூர், மும்பை, டெல்லி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் தாக்குதலை நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளது. அவர்கள் நோக்கம் வெளிநாட்டு சுர்றுலா பயணிகள்தான். இவ்வாறு அந்த எச்சரிக்கை கூறுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications