தனிமைப்பட்டது பாகிஸ்தான்.. இந்தியா உட்பட 4 நாடுகள் புறக்கணிப்பால் சார்க் மாநாடு ரத்து!
டெல்லி: பாகிஸ்தானில் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா உள்பட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 19வது சார்க் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதில் சார்க் நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திலுள்ள யூரி தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன.
இதனையடுத்து, 4 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணித்ததால் சார்க் மாநாடு மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைப்படி, சார்க் மாநாடு நடைபெற வேண்டுமானால் அனைத்து உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்பது கட்டாயம். இந்தியாவின் பின்னால் பல நாடுகளும் அணி வகுத்து நிற்பது, பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு எடுத்துக்கொண்ட முயற்சியின் முதல் வெற்றி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications