நெல்லை மகேந்திரகிரியில் மர்ம விமானம் பறந்ததாக தகவல் இல்லை என்கிறார் இஸ்ரோ கிரண்குமார்
ஸ்ரீஹரிகோட்டா: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் மர்ம விமானம் ஒன்று பறந்ததாகவும், அது இந்திய ரேடரில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதை பற்றி எனக்கு தெரியாது. காரணம், எங்களுக்கு அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் இன்று வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் கிரண்குமார் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் இன்று விண்ணில் ஏவப்படுகின்றன. இதற்கான 59 மணி நேர கவுன்ட்டவுன் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. வணிக ரீதியில் அனுப்பப்படும் இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். பூமியின் தொலை உணர்வு, பேரிடர் கண்காணிப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றிற்காக இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி.சி.-29 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-29 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதனுடன் சேர்த்து சிங்கப்பூரின் 6 செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் திங்கட்கிழமை காலை தொடங்கியது. இந்த பணிகளை இஸ்ரோ சிறப்பாக செய்து வருகிறது.
செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும். மேலும் 3 செயற்கை கோள்களை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம் என்றார். மங்கள்யான் செயற்கைகோள் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அதில் இருந்து முழுமையான தகவல் கிடைத்து வருகிறது. அதன் பணிக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2016ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 3 செயற்கைக்கோள்கள் தனித்தனியாக விண்ணில் செலுத்த உள்ளோம். அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் மர்ம விமானம் ஒன்று பறந்ததாகவும், அது இந்திய ரேடரில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதை பற்றி எனக்கு தெரியாது. காரணம், எங்களுக்கு அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என்றம் அவர் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications