2024க்கு வேற லெவலில் விடைகொடுக்கும் இஸ்ரோ.. நாளை விண்ணில் பாய்கிறது PSLV C60: கவுண்ட் டவுன் ஆரம்பம்!
ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் இன்று இரவு அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது. பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்கி உள்ளது.
ஸ்பெடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. விண்ணில் செலுத்தப்படும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம்-4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் இருக்கும். இதில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்தவை. எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை.
இந்த பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட், 'SpaDeX - A', 'ஸ்பெடெக்ஸ் - பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது. ராக்கெட் விண்ணில் பாய்வதை இஸ்ரோவின் யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம்.
வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'SpaDeX' எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.
இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணையச் செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications