2 பிரிட்டிஷ் செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி42
இஸ்ரோ இன்று 2 பிரிட்டிஷ் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா: 2 பிரிட்டிஷ் செயற்கைக் கோள்களை ஏந்திய பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இரு செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் இரு செயற்கைக் கோள்களும் பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இன்று பிஎஸ்எல்வியால் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று ஏவப்பட்டது
இந்த நிலையில் இன்று பிஎஸ்எல்வி சி-42 (PSLV-C42) ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியா பயன்படுத்தும் அதிக திறன் கொண்ட பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இந்த பிஎஸ்எல்வி சி-42 (PSLV-C42) ராக்கெட்டும் ஒன்று. இதன் மூலம் 2 பிரிட்டிஷ் செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

செயற்கைஒன்று
இந்த இரண்டும் பிரிட்டிஷின் சர்ரே சாட்டிலைட் டெக்னலாஜி லிமிடெட் (Surrey Satellite Technologies Limited - SSTL) நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது. முதல் ராக்கெட் நோவாசார்-1 (NovaSAR-1) சிறிய சாட்டிலைட் ஆகும். இது வானிலை ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சாட்டிலைட் 2
இரண்டாவது சாட்டிலைட்டும் அதே நிறுவனம் மூலம்தான் உருவாக்கப்பட்டது. இது எஸ்1-4 (S1-4) என்று அழைக்கப்படுகிறது. இது செல்போன் சிக்னலுக்காக உதவ கூடியது. ரேடார் பாதுகாப்பிலும் இது அதிக அளவில் உதவும்.
|
இரவில் ஏவப்பட்டது
இன்று இரவு 10.07 மணியளவில் பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டது. பல நாடுகளின் செயற்கைகோள்கள் தற்போது இஸ்ரோ மூலம் வணிக ரீதியாக ஏவப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இது இன்று இணைந்தது.

230 டன் எடை கொண்ட ராக்கெட்
பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட்டின் எடையானது 230 டன்னாகும். நோவாசார் செயற்கைக் கோளின் எடை 445 கிலோ ஆகும். எஸ்14 ராக்கெட்டின் எடை 444 கிலோ ஆகும்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications