Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளிக்கு முன்பே வெற்றிகரமாக ராக்கெட் ஏவியுள்ளோம் - இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்

பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது அனைத்து செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தீபாவளிக்கு முன்பே ராக்கெட் ஏவியுள்ளோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.

Recommended Video

    10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது PSLV C49

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள் களை நிலை நிறுத்தி வருகிறது.

    ISRO PSLV C49 : We have successfully launched a rocket before Deepavali says Shivan

    அந்தவகையில் பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவற்றுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகிறது.

    இன்றைய தினம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 49 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    இன்று செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு இருந்தது. இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

    இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

    கொரோனா பரவல் காரணமாக ராக்கெட் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 செயற்கைக் கோள்களுடன் இன்று பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

    ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் அனைத்து செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

    கொரோனா காலத்திலும் கடுமையாக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தீபாவளி பண்டிகை வரப்போகிறது அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியிருக்கிறோம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+