5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.
அந்தவகையில், அதிக எடையை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ரகத்தில் மற்றொரு வகையான 'எல்விஎம்3-எம்3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்திருக்கிறது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன.

36 செயற்கைக்கோள்கள்
இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைக்கோள் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இந்த 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும். எல்விஎம்3 எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது.

இஸ்ரோவுடன் ஒப்பந்தம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் எனும் தனியார் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்துகிறது. இதற்கு முன்னரும் இதே எண்ணிக்கையிலான செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியிருக்கிறது.

36 செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 36 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ஒப்பந்தத்தின் கடைசி தொகுதியான 36 செயற்கைக்கோள்கள் மீதம் இருக்கின்றன. இவை இன்று காலை 9 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

தொழிற்நுட்ப பயன்
இந்த செயற்கைக்கோள்கள் 450 கிலோமீட்டர் தொலைவில் 87.4 டிகிரி கோணத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தற்போது 36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்3-எம்3 ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது. இதனால் வணிக ரீதியாக அல்லாமல், தொழிற்நுட்ப ரீதியாகவும் இந்தியாவுக்கு பயன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications