5,805 கிலோ எடை.. 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் ஸ்பேஸ் 'சுமோ'.. கவுண்ட்டவுன் தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டா: பிரிட்டன் நிறுவனத்தை சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று காலை தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் விண்வெளி துறைக்காக அமெரிக்கா போன்ற நாடி இருந்த நிலையில் இன்று இத்துறையில் இந்தியா சர்வதேச நாடுகள் மத்தியில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்புதான். எனவேதான் பிரிட்டன் போன்ற நாடுகள் செய்ய முடியாத வேலையை கூட இஸ்ரோவால் அசால்ட்டாக செய்து முடித்துவிட முடிகிறது. மங்கள்யான் வெற்றிக்கு பின்னர் இந்தியாவின் பெயர் விண்வெளி துறையில் புதிய உச்சத்திற்கு சென்றது.
அதன் பின்னர் சர்வதேச அளவில் பல பெரிய 'மிஷன்களில்' இஸ்ரோ வேலை செய்ய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகதான் தற்போது பிரிட்டனை சேர்ந்த Network Access Associated Ltd (OneWeb) எனும் தனியார் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துகிறது. இதற்கு முன்னரும் இதே எண்ணிக்கையிலான செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியிருக்கிறது. அதுவும் இதே Network Access Associated Ltd (OneWeb) நிறுவனத்தை சேர்ந்த செயற்கைக்கோள்கள்தான்.

மிஷன்
அதாவது இந்த OneWeb நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான 'பார்தி' நிறுவனத்துடன் டையப் செய்துகொண்டுள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக 618 செயற்கைக் கோள்களை ஏவ திட்டமிட்டிருந்தது. இதில் ஏற்கெனவே இஸ்ரோ 582 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிவிட்டது. அதில் கடைசி 36 செயற்கைக்கோள்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி இஸ்ரோதான் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இன்னும் 36 செயற்கைக்கோள்கள் மீதம் இருக்கின்றன. இவைதான் நாளை(மார்ச் 26) காலை 9 மணியளவில் இஸ்ரோ விண்ணில் செலுத்த இருக்கிறது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கப்பட்டுள்ளது.

சுமோ வீரன்
இந்த மிஷனுக்கு LVM3-M3/OneWeb India-1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல அடுத்த வரவுள்ள புரொஜெட்டுக்கு LVM3-M3/OneWeb India-2 என பெயரிடப்பட்டுள்ளது. நாளை கொண்டு செல்லப்படவுள்ள செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,805 கி.கி. ஆனால் இதெல்லாம் இஸ்ரோவுக்கு 'அசால்ட்டு' வேலை. ஏனெனில் இதனை கொண்டு செல்ல இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ள ராக்கெட் LVM3. இந்தியாவின் ராக்கெட்டில் 'அதிரடியான' ராக்கெட் என இதை குறிப்பிடலாம். மற்ற ராக்கெட்டுகளை விட இது பார்க்க ஒரு 'சுமோ' வீரனை போல தனித்தன்மையாக தெரியும். இதன் திறனும் மற்ற ராக்கெட்டுகளைவிட தனித்தன்மையானதுதான். மொத்தம் 43.5 மீட்டர் உயரத்தில் 6.4 லட்சம் கி.கி எடையில் இருக்கும் இந்த பிரமாண்ட LVM3 ஒரு நொடிக்கு 11 கி.கி மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் 1 லட்சம் கி.கி எடையை சுமந்துக்கொண்டு காற்றை கிழித்துக்கொண்டு விண்ணில் பறக்கும்.

இலக்கு
36 செயற்கைக்கோள்களையும் 601 கி.மீ தூரத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் இந்த தூரத்தை வெறும் 19 நிமிடத்தில் இந்த LVM3 எட்டிவிடும். அப்படியெனில் இதன் வேகம் எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த LVM3 ராக்கெட்டுக்கு எனர்ஜி கொடுப்பது இரண்டு துணை என்ஜின்கள்தான். இதனை two strap-on motors என்று அழைப்பார்கள். இதில் திட எரிப்பொருள் இருக்கும். ராக்கெட் ஏவுதலின் முதல் கட்டத்தில் பூமியிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை இந்த ராக்கெட்டை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த என்ஜின்களுடையதுதான்.

திட்டம்
அதன் பின்னர் அது இரண்டும் தனியாக பிரிந்துவிடும். பின்னர் நடுவில் உள்ள முதன்மையான ராக்கெட் செயற்கைக்கோள்களை 601 கி.மீ தொலைவில் 87.4 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் திரவ எரிபொருளில் இயங்குகிறது. இதற்குதான் சற்று டைம் கூடுதலாக எடுக்கும். இந்த ப்ராசஸ் முடிய சுமார் 75 நிமிடங்கள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. இதில் மொத்தம் 9 கட்டங்கள் இருக்கின்றன. இந்த ராக்கெட்டை ஏவ கவுண்டன் தொடங்கியுள்ள நிலையில், எரிபொருள் சரிபார்ப்பு, வானிலை சரிபார்ப்பு பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications