'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான 20 மணி நேர கவுன்ட்டவுன் இன்று தொடங்கியது. நாளை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் 'சந்திரயான்-2' விண்கலம் செய்யப்போகிறது.

இந்த விண்கலத்தை 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3' ராக்கெட் மூலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 'கவுன்ட்டவுனும்' நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் 'சந்திரயான்-2' விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து வரும் 22-ந்தேதி 'சந்திரயான்-2' விண்கலத்துடன், 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3' ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என்றார்.
சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன. சந்திரயான்-2 ஏவுகணை நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications