ஆட்சி, அதிகாரத்தைப் பிடிக்க என்னவெல்லாம் செய்யுது பாருங்க இந்த பாஜக!
Recommended Video

பெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததைத் தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் குதிரை பேரம் படு மோசமாகியுள்ளதாம். காங்கிரஸ், மதச்சாரர்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளை பாஜக மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பதவியேற்புக்கு முன்னதாக தேவையான எம்எல்ஏக்களைத் திரட்ட முடியாத நிலை இருந்தாலும் கூட பதவியேற்புக்குப் பின்னர் பாஜகவின் ஆள் பிடி வேலைகள் மேலும் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.
ஒன்இந்தியாவிடம் பேசிய சில பாஜக தலைவர்கள் கூறுகையில், பதவியேற்பு முடிந்ததும் பலர் எங்களிடம் வந்து சேருவார்கள் என்றனர். 2008ம் ஆண்டு ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் பாஜக தீவிரமாக இருந்தது. ஆனால் இந்த முறை அப்படியே தலைகீழாக நிலைமை மாறியுள்ளது. சட்டசபைக்கு எம்எல்ஏக்களை வர விடாமல் தடுப்பதே தற்போது பாஜகவின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.

லிங்காயத்து எம்எல்ஏக்கள்
காங்கிரஸ் கட்சியில் உள்ள லிங்காயத்து சமூக எம்எல்ஏக்களைத்தான் பாஜக பெரிதும் நம்பியுள்ளது. அவர்களைப் பிரித்து உடைத்து தங்கள் பக்கம் திருப்ப அது தீவிரமாக உள்ளது. அவர்களைப் பிரித்துக் கூட்டி வர முடியாமல் போகும்பட்சத்தில் அவர்களை வாக்கெடுப்பிலிருந்து விலகி நி்ற்கவும் முயற்சிக்கப்படுகிறதாம்.

15 பேர் அணி தாவ முடிவு
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 154 எம்.எல்ஏக்களை இதுபோல திசை திருப்பி அவர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் செய்ய பாஜக முயற்சித்து வருகிறதாம். அப்படி நடந்தால் பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். அது எடியூரப்பாவுக்கு வசதியாகி விடும்.

கட்சியை உடைத்து வர வாய்ப்பில்லை
பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் பகிரங்கமாக வெளியே வர மாட்டார்கள். காரணம் மக்கள் கூர்ந்து பார்த்து வருகிறார்கள் என்பது ஒரு பக்கம். மறுபக்கம் கட்சித் தாவல் தடைச் சட்டம் தடையாக இருப்பது. எனவே வாக்கெடுப்பு நாளின்போது இவர்கள் திடீரென மாயமாகி விடுவார்கள். அதற்கான வேலைகளைத்தான் பாஜக தற்போது செய்து வருகிறதாம்.

இப்போதைய இலக்கு 208
சிலரை ராஜினாமா செய்ய வைக்கவும் பாஜக முயற்சித்து வருகிறதாம். மொத்தத்தில் அவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 208 ஆக குறைப்பதே பாஜகவின் இப்போதைய நோக்கம் என்கிறார்கள்.அப்படி நடந்தால் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 105 ஆக குரைந்து விடும். அது தற்போது பாஜகவிடம் இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிப்பது அதற்கு வசதியாகி விடும்.
எவ்வளவு கேவலமாப் போச்சு பாருங்க இந்த அரசியல்...!












Click it and Unblock the Notifications