ராம மோகன ராவ் சம்பந்தி வீட்டில் ஒரு பக்கம் ஐடி ரெய்டு... மறு பக்கம் பிறந்தநாள் கொண்டாட்டம்
ராம மோகன் ராவ் சம்பந்தி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைபெற்றது தகவல் தெரியவந்துள்ளது.
சித்தூர்: தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், அவரது சம்பந்தியான சித்தூரில் வசித்துவரும் பத்ரிநாராயணன், வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை புதன்கிழமை அதிகாலையில் இருந்து 25 மணி நேரம் நடைபெற்றது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்த போது முதலில் அதிர்ச்சி அடைந்த பத்ரிநாராயணன் பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்தாராம்.

பத்ரிநாராயணன் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள் என்ற தகவலை கேள்விப்பட்டு பாதுகாப்புக்காக சித்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். எனினும் அவர்களை வருமான வரி அதிகாரிகள் உள்ளே வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
பத்ரிநாராயணனுக்கு ரெய்டு நடந்த டிசம்பர் 21ம் தேதி பிறந்த நாளாகும். அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது முதலில் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோதே வீட்டு வாசலில் பத்ரிநாராயணன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினாராம்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவந்த தெலுங்கு தேசம் கட்சியினரும், நண்பர்களும் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதை அறிந்ததும், வாசலில் நின்றபடி வாழ்த்து கூறிவிட்டு சென்றனர்.
சோதனையின்போது ரூ.25 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம் மற்றும் 125 ஏக்கர் நிலம் வாங்கியதற்கான பத்திரம் ஆகியவற்றை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பத்ரிநாராயணன் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகை, பணம் தொடர்பாக, அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications