கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கும் வந்தாச்சு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்!
பெங்களூரு: டிசம்பர் 25ம்தேதி நெருங்கும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை ஜுரம் ஏகத்துக்கும் ஏறிக்கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் கிறிஸ்துமஸை எப்படி பயனுள்ள வகையில் கொண்டாடுவது, எப்படி நண்பர்களை அசத்துவது என்பதையும் ஸ்மார்ட் போன் மூலமே சொல்லிக் கொடுக்க களமிறங்கியுள்ளது ஒரு அப்ளிகேஷன்.
இந்த அப்ளிகேஷன் பெயர் It's Time for Christmas. கூகுள் பிளே ஸ்டோரில், இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
கிறிஸ்துமஸ் தொடர்பான அனிமேஷன் வால்பேப்பர்கள், வாழ்த்து மடல்கள், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்திக் கொள்ள சிறப்பு கவர்போட்டோக்கள், குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் கதைகள், கிறிஸ்துமஸ் பலகாரம் தயார் செய்யும் குறிப்புகள் என எவ்வளவோ உண்டு இந்த அப்ளிகேஷனில்.
இதிலுள்ள வால்பேப்பர்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி குஷிப்படுத்த முடியும். பேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் ஷேர் செய்து மகிழ முடியும். கிறிஸ்துமஸ் கொண்டாட காரணம் என்ன, சாந்தா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா எதற்காக வருகிறார், கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது எப்படி போன்ற பல டிப்சுகளும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.

இதுவரை டவுன்லோடு செய்தவர்கள் அத்தனைபேருமே, 5 ஸ்டார்களை அள்ளி கொடுத்துள்ளார்கள் என்பதில் இருந்தே இதன் பயன்களை தெரிந்துகொள்ளமுடியும். என்ன அப்ளிகேஷனை டவுன்லோடு பண்ண போனை எடுத்துட்டீங்க போல இருக்கு..?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications