”இது எனக்கு அவ்ளோ சிறப்பான வருடம்”- மகிழும் சானியா மிர்சா!
டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா எனக்கு இன்னும் நிறைய டென்னிஸ் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இது அவருக்கு மிகவும் சிறப்பான வருடம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று அளித்த ஒரு பேட்டியில், "எனக்கு இதைவிட சிறந்த ஆண்டு அமைவது என்பது கடினம்.

அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட சிறப்பாக அமையாவிட்டாலும், இந்த ஆண்டுக்கு நிகரான வெற்றிகளை குவிக்க முடியும் என்று நம்புகிறேன். எனக்கு இன்னும் நிறைய டென்னிஸ் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது. இந்த சீசன்தான் எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகச்சிறந்த பகுதி.
கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடி வந்தாலும், இந்த ஆண்டில்தான் என்னால் களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தது, நிறைய தியாகங்களை செய்தது உள்ளிட்டவற்றால்தான் இப்போது சாதிக்க முடிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினாங்கிஸ்சுடன் இணைந்து சானியா மிர்சா 2 கிராண்ட்ஸ்லாம் உள்பட 9 இரட்டையர் பட்டங்களை வென்றார். அத்துடன் இரட்டையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் அலங்கரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications