அடேங்கப்பா.. ஐடி துறையில் என்ன ஒரு வேகம்.. அரசியல் பழிவாங்கலுக்காக ரூ.5 கோடி ஆட்டம்?
டெல்லி: கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமாரின் டெல்லி இல்லத்தில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்க வைத்தது கவனித்துக்கொள்வதற்காக கர்நாடக மின்சாரத்துறை அமைச்சரும் தொழிலதிபருமான டி.கே.சிவகுமாரின் பெங்களூர் மற்றும் கனகபுரா நகரிலுள்ள இல்லம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரெசார்ட்டில் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இதனிடையே அவரிடம் செல்போன்களையும் பறித்து வைத்துக்கொண்டு ஐடி அதிகாரிகள் அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ.5 கோடி
டி.கே.சிவகுமாரின் டெல்லியிலுள்ள வீடும் சோதனைக்கு தப்பவில்லை. இதனிடையே டெல்லியிலிலுள்ள சிவகுமார் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஐடி அதிகாரிகள் மீடியாக்களுக்கு தகவல்களை கசிய விட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அமளி
காங்கிரஸ் அமைச்சர், எம்எல்ஏக்களை குறி வைத்து ஐடி ரெய்டு நடப்பதால் பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை காங்கிரஸ் கிளப்பியுள்ளது.

ராமமோனராவ் வீட்டு ரெய்டு புஸ்
இதுபோன்ற நெருக்கடிகளால் ஐடி அதிகாரிகள் இப்படி ஒரு தகவலை பரப்பியுள்ளனர். அதேநேரம், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டுக்கு பிறகு நடந்தது என்ன என்பதை இதுவரை ஐடி துறை தெளிவுபடுத்தவில்லை. ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டதே தவிர தெளிவான அறிக்கை வரவில்லை.

இரட்டை நிலைப்பாடு
அதேநேரம், குஜராத் எம்எல்ஏக்களை மிரட்டி வாக்களிக்க வைக்க கர்நாடக அமைச்சர் சிவகுமார் வீடுகளில் ரெய்டுகளை நடத்தியுள்ள ஐடி துறை, ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி பரபரப்பு கிளப்பியுள்ளது. இதன்மூலம், ஐடிதுறையின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது. சிவகுமார் அமைச்சர் மட்டுமல்ல, ஒரு பிரபல தொழிலதிபர். அவரது வீட்டில் ரூ.5 கோடி இருந்தாலும் கூட அது கணக்கில் காட்டப்படவில்லையா என்பதை உறுதி செய்ய வேண்டியது ஐடி துறை கடமை. ஆனால் புரளிகளை கிளப்பிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக ஐடி துறையை பாஜக பயன்படுத்துவது ஜனநாயக நோக்கர்கள் மத்தியில் கண்டனத்தை சம்பாதித்துள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications