மம்தா பானர்ஜிக்கு அன்னா ஹசாரே ஆதரவு தருவது ‘எனது துரதிருஷ்டம்’: கெஜ்ரிவால்
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு , சமூக சேவகர் அன்னா ஹசாரே ஆதரவு அளித்தது தனது துரதிருஷ்டம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் போராட்டங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், அன்னாவின் அறிவுரையை மீறி அரசியல் கட்சி ஆரம்பித்தார் கெஜ்ரிவால். இதனால் ஹசாரே - கெஜ்ரிவால் உறவில் விரிசல் ஏற்பட்டது.

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவோடு டெல்லி முதல்வரானார் கெஜ்ரிவால். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் டெல்லி முதல்வராக செயல்பட்ட கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவிற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைப் பாராட்டி பேசியிருந்தார் அன்னா ஹசாரே. இது குறித்து கெஜ்ரிவாலிடம் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:-
"அன்னா ஹாசாரே எங்களை விரும்பாமல் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்ததில் எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக நான் கருதவில்லை. இது எனது துரதிருஷ்டம் என்றே கருதுகிறேன்.
சில வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் அன்னா ஹசாரேவை மிகவும் மதிக்கிறோம்.அன்னா ஹசாரே எதை கூறினாலும் அது எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று", என இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications