ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீன் பிண்ணனியில் அரசியலில்லை: காங்கிரஸ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Jagan Reddy’s release likely to accelerate political realignments
டெல்லி: ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீன் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி . 16 மாத சிறை வாசத்திற்குப் பிறகு, நேற்று முன் தினம் ஜாமீன் கிடைக்கப் பட்டதைத் தொடர்ந்து நேற்று சிறையிலிருந்து விடுதலையானார் ஜெகன்.

அரசியல் உள்நோக்கத்தோடு தான் ஜெகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது எனவும், இந்த விவகாரத்தில், அவருக்கும், காங்கிரசுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக பா.ஜனதாவும், சந்திரபாபு நாயுடுவும் குற்றம் சாட்டி இருந்தனர்.

அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ தெரிவித்ததாவது, ‘ஜெகன், தனது விடுதலையை கொண்டாடட்டும். யாரும் ஜெயிலில் இருப்பதை காங்கிரஸ் விரும்புவது இல்லை. நாங்கள் ஜனநாயக கட்சி. அவரது விடுதலைக்கு அரசியல் உள்அர்த்தம் கற்பிக்கக்கூடாது.

சட்டம், தனது கடமையை செய்துள்ளது. அதே சமயத்தில், ஜெகன் கட்சியுடன் கூட்டணி வருமா? என்பது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+