சீமாந்திரா: ஜெகன் கட்சி ஆட்சியை கைப்பற்றும்- 18 லோக்சபா தொகுதிகளில் வெல்லும்- கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 105 முதல் 112 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் 15 முதல் 18 லோக்சபா தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படு "ஆரா" என்ற நிறுவனம் சீமாந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 25 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேசிய ஊடகங்கள் அனைத்தும் சீமாந்திராவில் தெலுங்குதேசம் கட்சியே லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறி வரும் நிலையில் உள்ளூர் நிறுவனத்தின் கணிப்பு தலைகீழாக இருக்கிறது.

சீமாந்திரா சட்டசபை தொகுதிகள்..

சீமாந்திரா சட்டசபை தொகுதிகள்..

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமாந்திராவுக்கு 175 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடானது. இங்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 88 இடங்கள்.

ஜெகன் கட்சிக்கு 112

ஜெகன் கட்சிக்கு 112

ஆரா அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சீமாந்திராவில் 105 முதல் 112 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதாம். இதனால் ஜெகன் கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகுமாம்.

பாஜக- தெலுங்குதேசம் கட்சிக்கு..

பாஜக- தெலுங்குதேசம் கட்சிக்கு..

சீமாந்திராவில் தெலுங்குதேசம், பாரதிய ஜனதா கட்சிக்கு 2வது இடம்.. அதாவது 55 முதல் 65 தொகுதிகள் வரை கிடைக்குமாம்..

காங்கிரஸ் கதி?

காங்கிரஸ் கதி?

சீமாந்திராவில் காங்கிரஸ் கட்சி பலவாறாக பிளவுபட்டு இருக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனிக்கட்சி தொடங்கிவிட்டார். பல காங்கிரசார் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகளுக்கு மொத்தமே 10 முதல் 15 இடங்கள் கிடைக்கும் என்கிறது ஆரா.

சீமாந்திராவில் லோக்சபா தேர்தலிலும் ஜெகனுக்கு ஜே.

சீமாந்திராவில் லோக்சபா தேர்தலிலும் ஜெகனுக்கு ஜே.

ஆந்திர மாநில பிரிவினைக்குப் பின்னர் சீமாந்திராவுக்கு 25 லோக்சபா தொகுதிகள் உண்டு. இந்த 25-ல் 15 முதல் 18 தொகுதிகளை ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸே அள்ளிவிடுமாம்.

தெ.தேசம்- பாஜகவுக்கு..

தெ.தேசம்- பாஜகவுக்கு..

சீமாந்திராவில் தெலுங்குதேசம்- பாஜக அணிக்கு 7 முதல் 10 தொகுதிகள் கிடைக்குமாம்.

காங்கிரஸுக்கு 1

காங்கிரஸுக்கு 1

சீமாந்திராவில் அனேகமாக காங்கிரஸ் கட்சிக்கு 1 லோக்சபா தொகுதியில்தான் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாம்..

தெலுங்கானாவில் 119 சட்டசபை இடங்கள்

தெலுங்கானாவில் 119 சட்டசபை இடங்கள்

தெலுங்கானா புதிய மாநில சட்டசபையின் மொத்த இடங்கள் 119. இங்கு ஆட்சி அமைக்க 60 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை..

டி.ஆர்.எஸ். மெஜாரிட்டி

டி.ஆர்.எஸ். மெஜாரிட்டி

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 52-57 சட்டசபை தொகுதிகளில் வெல்லுமாம்.

காங்கிரஸ்- சிபிஐக்கு 2வது இடம்

காங்கிரஸ்- சிபிஐக்கு 2வது இடம்

2வது இடம் காங்கிரஸ்- சி.பி.ஐ. கூட்டணிக்கு கிடைக்குமாம். மொத்தம் 43 முதல் 45 தொகுதிகளில் இந்த அணி வெல்லும்.

பாஜக- தெலுங்குதேசம்

பாஜக- தெலுங்குதேசம்

3வதாக தெலுங்குதேசம்- பாஜக அணிக்கு 12-15 தொகுதிகள் கிடைக்கலாம்.

ஜெகன் கட்சிக்கு..

ஜெகன் கட்சிக்கு..

தெலுங்கானாவிலும் ஜெகன் கட்சிக்கு 3 முதல் 6 தொகுதிகளும் மஜ்லிஸ் கட்சிக்கு 6 முதல் 7 இடங்களும் கிடைக்கலாமாம்.

தொங்கு சட்டசபை?

தொங்கு சட்டசபை?

இந்த கருத்து கணிப்பின் அடிப்படையில் தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்படத்தான் வாய்ப்பிருக்கிறதாம்.

லோக்சபா தேர்தல்..

லோக்சபா தேர்தல்..

தெலுங்கானாவில் லோக்சபா தேர்தலில் 7 முதல் 9 இடங்களை டி.ஆர்.எஸ். கட்சியும் காங்கிரஸ் அணி 4 முதல் 6 இடங்களையும் கைப்பற்றுமாம்.

பாஜக அணிக்கு...

பாஜக அணிக்கு...

தெலுங்கானாவில் பாஜக- தெலுங்குதேசம் அணிக்கு 2 முதல் 3 இடங்களும் ஜெகன் கட்சிக்கு 1, மஜ்லிஸ் கட்சிக்கு 1 முதல் 2 இடங்கள் கிடைக்குமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+