என் "மேஜிக்" எனக்கே வேலை செய்யலையே... ஆசாராம் பாபு புலம்பல்
மும்பை: கார் விபத்து வழக்கில் உடனடியாக ஜாமீன் பெற்று விடுதலையான சல்மான் கான் வழக்கை சுட்டிக் காட்டி, தனக்கு இதுபோல நடக்காமல் போய் விட்டதே என்று கிண்டல் அடித்துப் புலம்பியுள்ளார் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு.
கார் விபத்து வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உடனடியாக அவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார். அப்பீலும் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அன்றே விசாரணை நடத்தி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் இதைச் சுட்டிக் காட்டி சமீபத்தில் டிவிட்டரில் சரமாரியாக போஸ்ட்டுகள் போட்டு வந்தனர். இந்த நிலையில் ஆசாராம் பாபுவே இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆசாராம் பாபு கூறியதாக ஒரு இதழில் வெளியாகியுள்ள பேட்டியில், சல்மான் கான் என்ன மாயம் செயதார்... அவர் 20 நிமிடம் கூட சிறைக்குள் போகவில்லையே.. ஆனால் நான் 20 மாதமாக சிறைககுள் இருக்கிறேன். நான் பெயிலுக்கு முயற்சித்தபோது ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டிருக்கும் போல. அதான் கிடைக்கவில்லை.
எனது மாஜிக் எனக்கே சரிப்பட்டு வரவில்லை. நான் சல்மான் கானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் போல என்று கூறியுள்ளார் ஆசாராம் பாபு.
தனது ஆசிரமத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது, மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு கடுமையான புகார்களில் சிக்கி சிறையில் இருக்கிறார் ஆசாராம் பாபு. இவரது வழக்கி் தொடர்புடைய 2 முக்கிய சாட்சிகளை சிலர் ஏற்கனவே சுட்டுக் கொன்று விட்டனர். தொடர்ந்து சாட்சிகளை இந்தக் கும்பல் குறி வைத்து துரத்திக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications