சிறைகளில் நாசவேலைக்கு 'ஸ்கெட்ச்' போடும் ஜிஹாதிகள்... உச்சபட்ச கண்காணிப்பில் உளவுத்துறை
டெல்லி: சிறைகளில் இருக்கும் தீவிரவாதிகள் தப்பியோ அல்லது வழக்குகளில் இருந்து விடுதலையாகியோ வெளியே வந்து புதிய இயக்கங்களை உருவாக்கிவிடாமல் இருக்கவும் சிறைகளில் இருந்தபடியே நாசவேலைகளை நிகழ்த்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டுவிடாமல் இருக்கவும் உளவுத்துறை உச்சபட்ச கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
உலகை உலுக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபுபக்கல் அல் பக்தாதி, சிறையில் இருந்து விடுதலையான பின்னர்தான் விஸ்வரூபமெடுத்தான். இதேபோல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் வெளியே வந்து மிக பயங்கரமான நபர்களாக உருவெடுத்து வருவது தொடர் கதையாகிவிடுகிறது.

மத்திய பிரதேசத்தின் கண்ட்வா சிறையில் இருந்து வெளியே வந்த தீவிரவாதிகள் உளவுத் துறைக்கு பெரும் தலைவலியாக குடைச்சல் கொடுத்து வந்ததையும் நினைவில் கொள்ளலாம்.. கண்ட்வா சிறையில் இருந்து தப்பிய 5 சிமி தீவிரவாதிகள் சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு, தெலுங்கானாவில் கொள்ளைகள், பெங்களூரு சர்ச் தெரு குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து பல சம்பவங்களை அரங்கேற்றினர். ஒருவழியாக இந்த பயங்கரவாதிகள் பிடிபட்டு வருகின்றனர்.
இருப்பினும் நீண்டகாலம் சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் மற்ற தீவிரவாதிகளுடன் எளிதில் தொடர்பு கொண்டு இத்தகைய தாக்குதல்களை நடத்துவது வசதியாகிவிடுகிறது. இதனால்தான் தற்போது உளவுத்துறை இத்தகைய தீவிரவாதிகள் சிறைகளில் சந்திப்பதைத் தடுக்குமாறு சிறை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சிறைச்சாலைகளே நாசவேலைகளை திட்டமிடும் மையங்களாக உருமாறுவதைத் தடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
சிறைகளில் சந்தித்துக் கொள்ளும் தீவிரவாதிகள் தங்களுக்குள் நாசவேலை திட்டங்களை முதலில் பகிர்ந்து கொள்கின்றனர்.. பின்னர் தங்களை சந்திக்கும் வரும் உறவினர்கள் மூலமாக வெளியே உள்ள தீவிரவாதிகளுக்கு சதித் திட்டங்களை தெரிவிக்கின்றனர். இப்படித்தான் ஹைதராபாத் சிறையில் உள்ள தீவிரவாதி யாசின் பட்கல் இதர தீவிரவாத சகாக்களுடன் சேர்ந்து தப்பிக்க திட்டமிட்டிருந்தான் என்பதும் தெரியவந்தது.
அண்மையில் குஜராத் சிறை ஒன்றில் சுரங்கம் அமைத்து சில இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தப்ப முயற்சித்ததும் தெரியவந்தது. இதனால் சிறை நிர்வாகங்கள் படு உஷாராக இருக்குமாறு உளவுத்துறை அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications