ஜெய்ப்பூர் இலக்கிய விழா.. பேராசிரியர் மைக்கேல் சாண்டலை பாராட்டிய சசி தரூர்
ஜெய்ப்பூர்: இன்று (பிப்.26) நடைபெற்ற ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கலந்து கொண்டார்.
"பூமியின் மிகப் பெரிய இலக்கிய நிகழ்ச்சி" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா, கருத்துக்களின் அற்புதமான விருந்தாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர்கள் ஆகியோர் சிந்தனைமிக்க உரையாடலை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு, ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2021ன் பெருமைமிகு நேரடி ஒளிபரப்பு பார்ட்னர் மற்றும் டிஜிட்டல் மீடியா பார்ட்னர்களாக டெய்லிஹண்ட் மற்றும் ஒன்இந்தியா நிறுவனங்கள் இணைகிறார்கள்.

முன்னதாக, இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர், வன்முறை, பசி, வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவுபவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஹர்ஷ் மந்தர், தனது சமீபத்திய புத்தகம் "Locking Down the Poor: The Pandemic and India's Moral Centre." குறித்து உரையாற்றினார்.
இன்றைய அமர்வில், "The Tyranny of Merit: What's Become of the Common Good", தத்துவவாதி மைக்கேல் சாண்டல் தனது புதிய புத்தகம் மற்றும் நமது காலத்தின் அரசியல் குறித்து எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூருடன் உரையாடினார்.
கலந்துரையாடலின் போது, மைக்கேல் சாண்டலைப் பாராட்டிய சசி தரூர், அவர் நீண்ட காலமாக அவரது படைப்புகளைப் பின்பற்றி வருவதாகவும் கூறினார்.
"தகுதி" பற்றிய விவாதத்திற்கு சாண்டல் முற்றிலும் புதிய பரிமாணத்தை அளிக்கிறார். தகுதிவாய்ந்த நெறிமுறை சமமற்ற சமுதாயத்தில் பயன்படுத்தப்படுவத மட்டுமல்லாமல், குறைபாடு என்பது கருத்தியிலேயே உள்ளது என்பதை அவர் நினைவுபடுத்தினார்.
உலகமயமாக்கல் மற்றும் அதிகரித்துவரும் சமத்துவமின்மை ஆகியவற்றுடன் வெற்றி மற்றும் தோல்வி குறித்த நமது வரையறைகளை மறுபரிசீலனை செய்வதில் சாண்டலின் வாதம் மையமாக உள்ளது.
சமீபத்திய தசாப்தங்களில், உலகமயமாக்கல் காரணமாக வெற்றியாளர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் இடையிலான பிளவு ஆழமடைந்து வருகிறது. வளர்ந்து வரும் சமத்துவமின்மையால், அணுகுமுறையில் மாற்றம் உள்ளது. அவரவர்களின் வெற்றி அவரவர்களின் சொந்த செயலால் விளைவதாகும்" என்று சாண்டல் கூறினார்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2021 (ஜே.எல்.எஃப்) இன் 14 வது பதிப்பும் virtual முறையில் நடக்கிறது. பிப்ரவரி 19 தொடங்கி, பிப்.21 அன்று முதல்கட்ட ஜெய்ப்பூர் இலக்கிய விழா நிறைவடைந்த நிலையில், மீண்டும் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெறுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications