For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2018: 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள்- ஜேட்லி

இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள்- ஜேட்லி- வீடியோ

    டெல்லி: இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

    2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.

    Jaitley says that new double tracks will be formed

    அப்போது அவர் கூறுகையில் , 18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும். 99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும்.

    தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வளர்ச்சிக்கு ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வித்துறை வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

    அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும். 25,000 பேருக்கு அதிகமாக பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும்.

    1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். கிராமங்களில் 5 லட்சம் வைஃபை வசதிகள் அமைக்கப்படும் என்றார் அவர்.

    English summary
    Arun Jaitley presents the Union Budget 2018-2019. He says that new double tracks will be formed for 18,000 kilometer long.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X