அவசர சட்டத்திற்கு உடனே அனுமதி.. ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்திய அதிமுக எம்.பிக்கள்
அவசர சட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுப்பதற்காக அதிமுக லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்.
டெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி, குடியரசு தலைவரை அதிமுக எம்.பிக்கள் சந்தித்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மத்திய அரசின் சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் நேற்று, ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கின. இதையடுத்து, குடியரசு தலைவருக்கு அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுப்பதற்காக அதிமுக லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் ராஷ்டிரபதி பவன் சென்று, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த குழுவிற்கு லோக்சபா துணை சபாநாயகரும், கரூர் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை தலைமை வகித்துள்ளார்.
இன்று இரவுக்குள் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications