ஜம்மு காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல்.. முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை 24 தொகுதிகளில் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த 24 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று 3 இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு காஷ்மீரில் 2014-ல்தான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர், சட்டசபை இல்லாத லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் 2019-ல் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிற முதல் சட்டசபை தேர்தலும் இதுதான்.
2019-ம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவிலேயே 6 ஆண்டுகள் பதவி காலம் கொண்ட ஒரே சட்டசபை ஜம்மு காஷ்மீர்தான். ஆனால் 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கான பதவிக் காலம் 5 ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
முதல் கட்ட தேர்தல் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மாநில கட்சிகள் களம் காண்கின்றன.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி பிஜ்பிகாரா தொகுதியில் களம் காண்கிறார்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 மாவட்டங்களின் 24 தொகுதிகளில் மொத்தம் 3276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14,000 பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மட்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 இடங்களில் பிரசாரம் செய்தார். பாஜகவைப் பொறுத்தவரையில் 370-வது பிரிவு ஒழிப்பு நியாயமானது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது; வளர்ச்சியை உருவாக்குகிறோம் என்பது பிரசாரம். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம்; மாநில அந்தஸ்தை மீண்டும் பெறுவோம் என்பது உள்ளிட்டவை வாக்குறுதிகள். இவை தவிர தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவோம் என்கிற வாக்குறுதிகளும் இடம் பெற்றுள்ளன.
ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியும் வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முழு உஷார் நிலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications