பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல்.. 5 பாக். வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை!

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மற்றும் பொதுமக்கள் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 முதல் 5 பேர் கொல்லப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக வைத்துள்ளது. தீவிரவாதிகளை வேறு பகுதியில் ஊடுருவ வைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி கவனத்தை திருப்பும் செயலில் ஈடுபடும்.

    கடும் பதிலடி

    கடும் பதிலடி

    இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும். இந்த மோதலில் சில நேரங்களில் இரு தரப்புக்குமே உயிர் சேதங்களும் ஏற்படும்.

    3 பேர் உயிரிழப்பு

    3 பேர் உயிரிழப்பு

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மற்றும் பொதுமக்கள் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானுக்கு பதிலடி

    பாகிஸ்தானுக்கு பதிலடி

    இந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலில் இந்திய எல்லையில் 2 வீடுகள் சேதம் அடைந்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் செயலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஆக்கிரமிப்பு காஷ்மீர்

    ஆக்கிரமிப்பு காஷ்மீர்

    குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 முதல் 5 பேர் கொல்லப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல ஏராளமானோர் காயம் அடைந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+