ஜம்மு காஷ்மீர்: 24 தொகுதிகளில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் - பிரசாரம் ஓய்ந்தது!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 19-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்கிறார்; இன்று 3 இடங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு காஷ்மீரில் 2014-ல்தான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
முதல் கட்ட தேர்தல் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மாநில கட்சிகள் களம் காண்கின்றன.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி பிஜ்பிகாரா தொகுதியில் களம் காண்கிறார்.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 இடங்களில் பிரசாரம் செய்கிறார். ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி செப்டம்பர் 19-ந் தேதி மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்க பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications