தோட்டா தெறிக்க, தெறிக்க என்கவுண்டர்… 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அதிகாலை முதல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சோபியான் மாவட்டம் கெல்லர் பகுதியில் திவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும், உள்ளூர் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
Shopian: 3 terrorists killed in an encounter between terrorists & security forces in Keller area. Weapons also recovered. Operation in progress. CRPF, Army & J&K police had launched a joint operation in the early hours today.#JammuAndKashmir (visuals deferred by unspecified time) pic.twitter.com/dZpwwhxzBh
— ANI (@ANI) March 28, 2019
இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், என்கவுண்டர் நடந்து வரும் அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ரோந்து பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications