ஒன்றிணையும் 6 ஜனதா கட்சிகள் .. "சமாஜ்வாதி ஜனதா தள்" அல்லது "சமாஜ்வாதி ஜனதா கட்சி"..
டெல்லி: ஜனதா பெயரிலான 6 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகும் புதிய கட்சிக்கு "சமாஜ்வாதி ஜனதா தள்" அல்லது "சமாஜ்வாதி ஜனதா கட்சி" ஆகிய இரண்டில் ஒரு பெயர் சூட்டப்பட உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. குறிப்பாக பீகாரில் கோலோச்சிக் கொண்டிருந்த ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் இரண்டுமே படுதோல்வியைச் சந்தித்தன.
இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த கையோடு அந்த இரு கட்சிகளும் நெருக்கம் பாராட்டத் தொடங்கின. இதே பார்முலாவை உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் பின்பற்ற வேண்டும் எனவும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் இடதுசாரிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனிடையே மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல்களில் அடுத்தடுத்து பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றின. இதனால் முதல் கட்டமாக 'ஜனதா' என்ற பெயரில் இயங்கி வரும் 6 கட்சிகள் ஒரே கட்சியாக இணைந்தால் என்ன என்பதும் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா, சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக் தள், சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
பின்னர் அனைத்து ஜனதா கட்சிகளும் ஒரே கட்சியாக இணைவது என்றும் இதற்கான கொடி குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது இந்த புதிய கட்சிக்கு "சமாஜ்வாதி ஜனதா தள்" அல்லது "சமாஜ்வாதி ஜனதா கட்சி" ஆகியவற்றில் ஒன்று வைக்கப்பட இருக்கிறது. இக் கட்சியின் சின்னமாக சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னம் தேர்வு செய்யப்பட இருக்கிறது.
பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 6 கட்சிகள் இணைந்து ஒரே கட்சியாக பீகார் தேர்தலை எதிர்கொள்ளவும் திட்டமிட்டு வியூகம் வகுத்து வருகின்றன. இதனால் பீகார் தேர்தலை ஒட்டி இப்புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications