Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"16 வயதில் உறவு.." பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதை உயர்த்திய ஜப்பான்! ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ஆக இருந்த நிலையில், இப்போது அது 16ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் பாலியல் சார்ந்த கொடூர குற்றங்கள் அதிகமாகவே இருக்கிறது. ஜப்பான் சமூகத்தில் பாலியல் சார்ந்த விஷயங்களைப் பொதுவெளியில் பேச மாட்டார்கள். அதேநேரம் இதுபோன்ற குற்றங்களும் அங்கே அதிகமாக நடந்து வருகிறது.

 Japan Raises Age Of Consent From 13 To 16 Years Old

இதற்கிடையே பாலியல் குற்றங்களைக் குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இப்போது பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.

பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வயதாக இருக்கிறது. அதாவது பாலியல் உறவுக்கு இந்த வயதைக் கடந்தவர்கள் சம்மதிப்பது மட்டுமே சட்டப்பூர்வமாகக் கருதப்படும். உதாரணத்திற்கு ஒரு நாட்டில் சட்டப்பூர்வ வயது 17ஆக இருக்கிறது என்றால், அதற்குக் கீழ் உள்ளவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது பலாத்காரமாகவே கருதப்படும். அதை ஆங்கிலத்தில் statutory rape என்பார்கள்.

இதைத்தான் Age Of Consent அதாவது பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது என்கிறார்கள். இதுவரை உலகிலேயே ஜப்பான் நாட்டில் தான் சட்டப்பூர்வ ஒப்புதல் வயது மிகக் குறைவாக இருந்தது. அங்கே பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது 13ஆக இருந்த நிலையில், இப்போது அது 16ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கு ஜப்பான் நாடாளுமன்றம் சமீபத்தில் தான் ஒப்புதல் அளித்தது.

இதில் பாலியல் சார்ந்த குற்றங்கள் குறித்துப் பல சீர்திருத்தங்களும் இடம் பெற்றுள்ளன. பலாத்கார வழக்குகளின் விசாரணை உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் போராடி வரும் நபர்கள் இந்த சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ளனர். குழந்தைகளுக்கு எதிராகப் பெரியவர்கள் நடத்தும் பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் இது பெரிய பங்கு வகிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டப்பூர்வ சம்மதத்தின் வயது என்பது இப்போது பிரிட்டனில் 16ஆக உள்ளது. பிரான்சில் 15ஆகவும் ஜெர்மனி மற்றும் சீனாவில் 14ஆகவும் இருக்கிறது. ஜப்பான் நாட்டில் கடந்த 1907 முதல் சட்டப்பூர்வ வயது 13ஆகவே இருந்து வந்தது. இருப்பினும், சமீப காலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில், பல பிராந்தியங்களில் சட்டப்பூர்வ ஒப்புதலுக்கான வயது 16ஆக உயர்த்தப்பட்டது.

அதேநேரம் இந்த புதிய சட்டத்தின் கீழ், 13 வயதுக்கு மேல் இருக்கும் டீன் ஏஜ் வயதில் ஜோடிகள், அவர்களின் வயது ஐந்து மிகாமல் இருந்தால் இந்தச் சட்டத்தில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பல சட்டத் திருத்தங்களுக்கும் ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எந்தச் சம்பவங்கள் பாலியல் வழக்குகளாகச் சேர்க்கலாம் என்பது குறித்தும் விலக்கியுள்ளனர். அதன்படி, மது அல்லது போதையில் இருக்கும் போது உடலுறவு கொள்வது, மிரட்டி ஒருவருடன் உடலுறவு கொள்வதும் பலாத்காரமாகத் தேசிய குற்றவியல் சட்டத்தில் சேர்த்துள்ளனர். அதேபோல பெண்களை அனுமதியின்றி ஆபாசமாகப் படமெடுக்கும் குற்றத்திற்கும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜப்பான் அரசு மிகத் தாமதமாகவே இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+