ஜஷோட பென்.. என் மனைவி: வேட்பு மனுவில் மோடி ஒப்புதல்!
வதோதரா: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை திருமணமானர்.. தனது மனைவி பெயர் ஜஷோட பென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ,பியில் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திருமணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோட பென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மனைவின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியாது என மோடி தெரிவித்துள்ளார்.

மோடி தமக்கு திருமணமானதாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி.
2001,2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது திருமணம் பற்றி குறிப்பிடாமலே வந்தார் மோடி.
இதனால் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுவில் மோடி தனது திருமண நிலை குறித்து குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜஷோட பென் எங்கே?

மோடியின் மனைவி ஜஷோட பென், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அவர் மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications