ஐம்மு-காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி சென்ற தீவிரவாதிகள்? எரிந்த நிலையில் வாகனம் மீட்பு
ஸ்ரீநகர்: ஐம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை, அவரது வாகனம் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
162 பட்டாலியன் (டிஏ) பிரிவைச் சேர்ந்த ராணுவவீரர் ஷாகிர் மன்சூர் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனார். அவரது வாகனம் தெற்கு காஷ்மீரின் குல்காமில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

குல்காமின் அண்டை மாவட்டம் ஷோபியன் மாவட்டத்தில் பணியாற்றி வந்த இந்த ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் Chinar Corps பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதுபற்றி வெளியிட்டப்பட்டுள்ள பதிவில் : "162 பட்டாலியன் (டிஏ) இன் ரைபிள்மேன் ஷாகிர் மன்சூர் நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை. அவரது எரிந்த கார் குல்கம் அருகே அநாதையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மன்சூரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தேடல் நடந்து வருகிறது ". என்று கூறப்பட்டுள்ளது,
Recommended Video
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications