ஜெ. வழக்கில் பவானிசிங் நியமனம் தவறுதான்.. ஆனாலும் மறுவிசாரணை தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறுதான்... ஆனாலும் மறுவிசாரணை தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.
அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் லோகூர், பானுமதி ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.

அத்துடன் 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு பரிந்துரைத்தனர். இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் நேற்று முதல் விசாரணை நடத்தியது. இன்றும் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது 3 நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்த கருத்துகள்:
- அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறானது... அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராக அவருக்கு அதிகாரம் இல்லை.. சட்டப்படி மோசமானது..
- தமிழக அரசுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் இல்லை.
- அதே நேரத்தில் இது நடைமுறைகளில் ஏற்பட்ட தவறுகள்தான்...இதனால் மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை என்பதும் தேவை இல்லை.
- அன்பழகன் தரப்பு தங்களது புதிய வாதங்களை எழுத்துப்பூர்வமாக வரும் திங்கள்கிழமையன்று தாக்கல் செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.. ஏற்கெனவே அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த வாதங்களையும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.
- இதேபோல் குற்றவாளிகள் தரப்பும் தங்களது தரப்பு வாதத்ங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
- இருதரப்பு தரப்பு வாதங்களை ஆராய்ந்த பின்னர்தான் கர்நாடகா உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் இறுதித் தீர்ப்பளிக்க வேண்டும்.
- கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு தடை ஏதும் இல்லை.
- இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் திங்கள்கிழமையன்று (ஏப்ரல் 27) வழங்கப்படும்.
இது தொடர்பாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், பவானிசிங் நியமனம் தொடர்பாக அன்பழகன் தரப்பு முன்வைத்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அத்துடன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தமது தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை திங்களன்று தாக்கல் செய்ய அன்பழகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த முந்தைய வாதங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பவானிசிங் நியமனம் தவறானது.. இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமையன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications