ஜெ. வழக்கில் அப்பீல் செய்யுமா கர்நாடகா?: சட்ட வல்லுநர்களுக்கு ஓ.கே., காங். தயக்கம்!
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு செய்வது சட்டம் மட்டுமின்றி அரசியலையும் சார்ந்து உள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக ஹைகோர்ட் அவரை விடுதலை செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் கடமை கர்நாடகாவுக்கு உள்ளது.
ஹைகோர்ட் அளித்த 919 பக்க தீர்ப்பை, கர்நாடக சட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய முடியும்.

நாள் கணக்கு
விடுதலை செய்யப்பட்ட வழக்கில் அதிகபட்சமாக 90 நாட்களுக்குள்ளும், தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் அதிகபட்சம் 60 நாட்களுக்குள்ளும், மேல்முறையீடு செய்தாக வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவே, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

அரசியல் பின்னணி
ஆனால், சட்டத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே இந்த வழக்கை கர்நாடகம் அணுகவில்லை. அரசியல்ரீதியாகவும் இதை அணுகுவதாக இம்மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி காங்கிரஸ் தலைமையிடமிருந்து, மேல்முறையீடு செய்ய இசைவு வரும்வரை, கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாது என்றே தெரிகிறது.

மேகதாது விவகாரம்
மேகதாது விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் இடையே தகராறு உள்ளது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தால், மேகதாது விவகாரத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்ற அச்சமும் கர்நாடகாவுக்கு உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டி, நமது மாநில நலனை பார்த்துக்கொள்ளலாம், ஜெயலலிதாவை ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு யோசித்து வருவதாக தெரிகிறது.

சட்ட வல்லுநர்கள் ரெடி
ஆனால், ஹைகோர்ட் தீர்ப்பில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக, கூறும் கர்நாடக சட்ட வல்லுநர்கள், இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆச்சாரியாவும் வெளிப்படையாக இதை கூறிவிட்டார்.

இரு பாயிண்டுகள்
கர்நாடகா மேல்முறையீடு செய்தால், ஹைகோர்ட்டில் தங்களை சேர்க்காமலே வழக்கு நடத்தி முடிக்கப்பட்டதையும், கடன் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள பிழைகளையும் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு சம்மதிக்குமா, காங்கிரஸ் மேலிடம் பச்சைக்கொடி காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications