ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை வாங்கினால், ஜெ. முதல்வர் ஆனாலும் மீண்டும் பதவி பறிபோகும்?
பெங்களூரு: ஜெயயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் அளித்த தீர்ப்புக்ககு தடை வாங்க திட்டமிட்டுள்ளதாக அரசு வக்கீல் ஆச்சாரியா கூறியுள்ள நிலையில், அவ்வாறு தடை வாங்கினால் அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதத்தில் இருந்து ஜெயலலிதா தப்பினார்.

கூட்டல் பிழை
ஆனால், ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் நகலை படித்து பார்த்த சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், அதில் ஜெயலலிதா பெற்ற கடன் தொகை மதிப்பு அதிகரித்து காட்டப்பட்டுள்ளது. கூட்டல் கணக்கில் ஏற்பட்ட பிழையே இந்த தவறுக்கு காரணம் என்று தெரிகிறது.

77 சதவீதம்
வருமானத்துக்கு அதிகமாக 8.12 சதவீதம் அளவுக்கு ஜெயலலிதா சொத்து குவித்திருப்பதால், அது குற்றமில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். ஆனால், சரியாக கூட்டிப் பார்த்தால், 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேல்முறையீடு செய்ய கோரிக்கை
எனவே உடனடியாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா, மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை என்றபோதிலும், இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்ததுதான் என்றார்.

இடைக்கால தடை
மேலும் ஆச்சாரியா கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கையாக வைக்கப்படும் என்றார்.

உச்சநீதிமன்றத்தில் கிடப்பு
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகாவுக்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் அப்பீல் செய்தாலும், சுப்ரீம்கோர்ட் இந்த வழக்கில் எத்தனை வாய்தாக்கள் கொடுக்கப்போகிறதோ தெரியாது. ஏனெனில், பொதுவாக இதுபோன்ற அப்பீல் வழக்குகள் பல, உச்ச நீதிமன்றத்தில் நீண்ட ஆண்டுகளாக நிலுவையிலுள்ளன. அத்தோடு இதுவும், பத்தோடு பதினொன்றாக போடப்படும்.

தடை வாங்கினால் வேகம்
ஆனால், முதலில் ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கினால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கும் வந்துவிடும். இரு தரப்பு நெருக்கடியாலும் கேஸ் வேகம் பிடிக்க வாய்ப்புள்ளது.

எளிதில் கிடைக்கும்
இதில் மற்றொரு விவகாரத்தை கவனிக்க வேண்டியதும் அவசியம், தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், அது ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற பின் அவரது பதவிக்கும் வேட்டு வைக்கும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். ஏனெனில் கணக்கில் பிழை இருப்பது தெரியவந்தால், அதை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கும் எளிதில் இடைக்கால தடை கிடைத்துவிடும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் பதவி
ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், ஜெயலலிதா கீழ்மை நீதிமன்றம் அறிவித்தபடி குற்றவாளியாகவே தொடரும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அரசு பதவிகளை அவர் வகிக்க முடியாது. இந்த சூழ்நிலையில், மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றாலும் அவர் தனது பதவியை மீண்டும் பறிகொடுக்க நேரிடும்.

சு.சுவாமி சூசகம்
இதைத்தான் சுப்பிரமணியன் சுவாமியும் நேற்று சூசகமாக தெரிவித்தார். ஹைகோர்ட் தீர்ப்பு ஒரு கணித பிழையின் சோகம் என்று வர்ணித்த சு.சுவாமி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு செல்வேன் என்றும், அப்போது ஜெ. முதல்வராக இருந்தால் அந்த பதவியை இழப்பார் என்றும் சு.சுவாமி கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications